ட்ரெண்டிங்

11 கிலோ கெட்டுப்போன சிக்கனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

சேலம் அருகே உணவகங்களில் ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கெட்டுப்போன சிக்கன் மற்றும் உணவுப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டத்தில் ஷெவர்மாவை சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

 

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்த 20- க்கும் மேற்பட்ட உணவகங்களில் ஆய்வுச் செய்த அதிகாரிகள் கெட்டுப்போன 11 கிலோ சிக்கன் மற்றும் காலாவதியான சாப்பாடு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

 

மேலும், உணவகங்களின் உரிமையாளர்களைக் கடுமையாக எச்சரித்த அதிகாரிகள், ஐந்து உணவகங்களுக்கு தலா ரூபாய் 1,000 அபராதம் வசூலித்தனர்.