ட்ரெண்டிங்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சேலம் அரசு சட்டக்கல்லூரி புதிய கட்டடத

சேலம் அரசு சட்டக்கல்லூரி புதிய கட்டடத்தில் முதலாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசியதாவது

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 1106.2023 அன்று சேலம் மாவட்டம், கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய புதிய நிரத்திரக் கட்டடத்தினைத் திறந்து வைத்தார்கள். அந்தவகையில், இன்றைய தினம் இங்கு தொடங்கப்பட்டுள்ள முதலாம் ஆண்டு பிரிவில் மாணவர்களாகிய நீங்கள் இடம் பெற்றுள்ளது சிறப்புமிக்க நிகழ்வாகும். 
இக்கல்லூரியானது இளைய தலைமுறையினருக்கு தேவையான சட்டத் திறன்கள் மற்றும் அறிவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு திறம்பட சேவை செய்யக்கூடிய திறமையான சட்ட வல்லுநர்களை உருவாக்குவதன் மூலம் சேலம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. இளம் தலைமுறையினருக்கு சட்ட அறிவை வழங்குவதில் உள்ள உறுதிப்பாட்டிற்குச் சான்றாக சேலம் சட்டக் கல்லூரி விளங்குகிறது.இளைஞர்கள் மத்தியில் சட்டப் பட்டப் படிப்பில் ஆர்வம் அதிகரித்துள்ளதன் மூலம். சட்டக் கல்வியின் மதிப்பு பற்றிய தெளிவான அங்கீகாரம் உள்ளது.

சேலத்தில் தரமான சட்டக் கல்வி வழங்குவதன் மூலம், ஆர்வமுள்ள மாணவர்கள் சட்டத்தின் மீதான ஆர்வத்தைத் தொடரவும் சட்டத் தொழிலுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் வாய்ப்பை உறுதி செய்கிறது. சட்டக் கல்லூரி சட்டக் கல்விக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், இளைய தலைமுறையினரின் திறனை வளர்த்து, சட்டத் துறையில் சிறந்து விளங்க தேவையான திறன்களையும் அறிவையும் அவர்களுக்கு வழங்குகிறது. இது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.

இங்கு சட்டம் பயில உள்ள மாணவர்களாகிய நீங்கள் திறமையான சட்ட வல்லுநர்களாக உருவாகி, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இங்கு சட்டம் பயில உள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சட்டக்கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் எஸ், துர்காலட்சுமி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்ஐயப்பமணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.