சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகின்ற 25.10.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி.தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம் வட்டார வேலைவாய்ப்பற்ற பெத்தநாயக்கன்பாளையம் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட திட்டக்குழு (FBDP) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.10.2025 அன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு. மருத்துவம்,கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் 5,000.க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ஆம் வகுப்பு,10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு,ஐடிஐ, டிப்ளமோ,பட்டப்படிப்பு,பொறியியல்,செவிலியர்,ஆசிரியர்.தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும்,வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
எனவே பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில்நிறுவனங்களும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்,என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி,தெரிவித்துள்ளார்.


