ட்ரெண்டிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ்- இளம்புயல் திவ்யா பட்டம் வென்று அசத்தல்! 

மகளிர் உலகக்கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடர்: 

ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் 3ஆவது ஃபிடே மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் நடந்த இறுதி சுற்றுப் போட்டிகள் டிராவில் முடிவடைந்திருந்தன. ஜூலை 28- ஆம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த செஸ் வீராங்கனைகள் கோனேரு ஹம்பி (வயது 38), இளம்புயல் திவ்யா தேஷ்முக் (வயது 19) மோதினர். 

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் (வயது 19),  3ஆவது ஃபிடே மகளிர் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளார். உணர்ச்சிவசப்பட்டு கண்ணீரும் விட்டார். 

யார் இந்த இளம்புயல் திவ்யா தேஷ்முக்! 

இந்தியாவின் இளம் வீராங்கனையான திவ்யா தேஷ்முக், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 2021- ஆம் ஆண்டில் இந்தியாவின் 21-ஆவது பெண் செஸ் கிராண்ட் மாஸ்டரானார் திவ்யா தேஷ்முக். அதைத் தொடர்ந்து, 2023- ஆம் ஆண்டு அல்மாட்டியில் நடந்த ஆசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார். 

உலக செஸ் போட்டியில் இந்திய மகளிர் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.