நடிகர் ரஜினிகாந்தின் 75- வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (டிச.12) சேலம் மாவட்ட ரஜினி நற்பணி மன்றத்தினர், ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள ஆஸ்கர் திரையரங்கத்தில் 33 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தளபதி திரைப்படம் வெளியானது. இப்படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு மைசூருபாகுவை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அலுவலகத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் கேக் வெட்டியும், நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியும் மகிழ்ந்தனர்.

-zvRF1NnpuU.jpg )
