ட்ரெண்டிங்

சேலத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு! 

சேலம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (மே 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் நாளை (மே 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மே 10- ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.