ட்ரெண்டிங்

சேலத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்! 

செங்கல்பட்டு மாவட்டம், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நெம்மேலியில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பாக ரூபாய் 2,465 கோடி மதிப்பில் 95 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் ரூபாய் 2,058 கோடி மதிப்பில் 40 புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சேலம் மாநகராட்சியில் அம்ரூத் 20 திட்டத்தின் கீழ் விடுபட்ட பகுதிகளுக்கு ரூபாய் 246.20 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டம் எண்.18-ல் மெய்யனூர் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 85 லட்சம் மதிப்பில் பொருள் மீட்பு வசதி மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் கோட்டம் எண்.20,21,22 மற்றும் 24 ஆகிய விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்கும் பணி (சிப்பம்1) மற்றும் கோட்டம் எண்.1,2,3,23,24 மற்றும் 25 மற்றும் மண்டலம் 2-ல் கோட்டம் எண்.4.5 மற்றும் மண்டலம் 4-ல் கோட்டம் எண்.50,51,54,57,58 மற்றும் 59 ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி (சிப்பம் 25 வருடத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூபாய் 246.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் (2.0) கோட்டம் எண்.16-ல் ரூபாய் 85 லட்சம் மதிப்பில் மெய்யனூர் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் வளாகத்தில் பொருள் மீட்பு வசதி மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். 


இந்த பொருள் மீட்பு வசதி மையம் 2,891 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் ஹாப்பர் இயந்திரம், பிளாஸ்டிக் அறவை இயந்திரம், பேய்லிங் இயந்திரம், எரியூட்டி, போர்க் லிப்ட், மின்னணு எடை இயந்திரம், கை வண்டி ஆகியவை உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கான பணியை தொடங்கி வைத்த நிலையில் சேலம் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.18-ல் மாண்புமிகு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், ஆணையாளர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப, ஆகியோர் பூமிபூஜை செய்து பணியை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மண்டலக் குழுத் தலைவர் கலையமுதன், மாநகர கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன், செயற்பொறியாளர்கள் திலகா, செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்ரவிசந்திரன், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணியம், கவிராஜ், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.